மியன்மாருக்கு நிவாரண உதவிகளை வழங்க மூன்று குழுக்களை அனுப்பிய இலங்கை

மருத்துவ ஊழியர்கள் உட்பட இலங்கை முப்படை வீரர்கள் அடங்கிய குழுவொன்று இன்று சனிக்கிழமை சிறப்பு விமானத்தில் மியான்மருக்கு புறப்பட்டுச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
“முப்படைகளின் மருத்துவ மற்றும் பேரிடர் நிவாரணக் குழுக்கள், மூன்று பௌத்த மதப் பிரிவுகளின் தலைமைத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேகரிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடன், மியான்மருக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுக்கு உதவும் நோக்கிலும் மீட்பு, நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றை செய்வதற்காக மூன்று இராணுவக் குழுக்களுக்கள் சென்றுள்ளதுடன், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நன்கொடையும் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீ தலதா மாலிகாவா மியான்மருக்கு பூகம்ப நிவாரணமாக 15 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,100 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர் 5,000 பேர் காயமடைந்தனர், மேலும் 370 க்கும் மேற்பட்டோர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.