அதிக விலைக்கு வாகனங்கள் விற்கப்படும் நாடுகளில் இடம்பிடித்தது இலங்கை

அதிக விலைக்கு வாகனங்கள் விற்கப்படும் நாடுகளில் இடம்பிடித்தது இலங்கை

உலக வங்கி தரவுகளின்படி, வாகனம் வாங்குவதற்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த சந்தைகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக Advocata Institute தனது பேஸ்புக் பக்க பதிவில் அறிவித்துள்ளது.

2021 வாகன விலைகளின்படி, இலங்கையில் ஒரு வாகனத்தின் விலை உலகளாவிய சராசரி விலையை விட 1.75 மடங்கு அதிகமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விலைகள் பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இலங்கை இருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசையில் இலங்கை 175 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் மாலைத்தீவு 224.7 புள்ளிகளையும் சிங்கப்பூர் 355.8 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

அதிக வரி விகிதங்கள் மற்றும் வாகன இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கொள்கைகள் காரணமாக, நாட்டில் வாகன உரிமை சிலரால் வாங்கக்கூடிய ஒரு ஆடம்பரமாக மாறியுள்ளது.

இது மறைமுகமாக இயக்கம், உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை பாதிக்கிறது என்று Advocata Institute அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This