ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் ஜெய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசாயவுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு, ஆசிர்வாதம் பெற கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
‘கமின் கமட்ட’ திட்டத்தின் கீழ் கிராமப்புற தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை ( 25) தொடங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், எனினும் அந்தப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, எதிர்வரும் வாரம் பிரசார நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.