வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, சானக மாதுகொட மற்றும் தானும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரானவர்கள் என்றும் அவர் கூறினார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கிறது.” எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.