மேட் ஹென்றியின் வேகத்தினால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை

மேட் ஹென்றியின் வேகத்தினால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை

வெலிங்டனில் இடம்பெற்ற மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை ஒன்பது விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான வெள்ளைப் பந்து தொடரில் முதலில் நிறைவுற்ற மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என வெற்றி கொண்டிருந்தது.

இந்நிலையில் மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பித்திருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி கொண்ட நியூசிலாந்து அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அதற்கேற்ப முதலில் களம் புகுந்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரரான அவிஷ்க பெர்ணான்டோ ஒரு புரம் நிலைத்திருக்க மற்றைய நம்பிக்குக்குறிய துடுப்பாட வீரர்களான பத்தும் நிசங்க (9), குசல் மெண்டிஸ் (2) , கமிந்து மெண்டிஸ் (3) மற்றும் சரித் அசலங்க (0) என விரைவாகப் பெவிலியன் நடந்தனர்.

இருப்பினும் நிலைத்திருந்த அவிஷ்க பெர்ணான்டோ அரைச் சதம் கடந்து 56 ஓட்டங்களுடனும், ஜனித் லியனகே 36 மற்றும் வனிந்து ஹசரங்க 35 என ஓரளவிற்கு ஓட்டங்களை சேர்த்துக் கொடுக்க 43.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மேட் ஹென்றி நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆரம்ப விக்கெட் ஜோடியான வில் யங் மற்றும் ரிச்சின் ரவீந்திர ஆகியோரின் அசத்தலான 93 ஓட்ட இணைப்பாட்டத்தால் வெற்றியை இலகுவாக நெருங்கியது.

இந்நிலையில் ரிச்சின் ரவீந்திர 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் களத்திலிருந்த வில் யங் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும், சப்மேன் 29 ஓட்டங்களையும் பெற்று களத்திலிருக்க 26.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று ஒன்று விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றி பெற்றது.

மேலும், ஒருநாள் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. இலங்கை சார்பில் சமிந்து விக்ரமசிங்க ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். போட்டியின் நாயகனாக வேகத்தில் மிரட்டிய மேட் ஹென்றி தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Share This