பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள்: இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் இலங்கை வேண்டுகோள்

பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள்: இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் இலங்கை வேண்டுகோள்

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளையும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்ற நிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய பதற்றங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, அவ்விரு நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகங்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அத்தோடு அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளிடமும் நிதானத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், பதற்ற நிலையைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share This