
இலங்கை மற்றும் பாகிஸ்தான் – தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று
இலங்கை மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (11) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
மழை காரணமாக இரண்டாவது போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மழை காரணமாகக் கைவிடப்பட்ட இரண்டாவது T20 போட்டிக்காக நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்த ரசிகர்கள்,
இன்றைய (11) மூன்றாவது போட்டியை இலவசமாகப் பார்ப்பதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது
CATEGORIES விளையாட்டு
