இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஷிலா ஜூனியர் கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மழை மற்றும் காலையில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி அமர்வுக்காக ரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-412 ஹெலிகாப்டர் இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இருப்பினும், பாதகமான வானிலை கடந்துவிட்டதால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.