புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும்(12) விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

காலி, மாத்தறை, பதுளை, தங்காலை, கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக மகும்புர, கடவத்தை, கடுவெல மற்றும் பஸ்டன் மாவத்தையை மையப்படுத்தி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This