மறு அறிவித்தல் வரை விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

மறு அறிவித்தல் வரை விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ தலதா புனித யாத்திரைக்கென கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு முன்னெடுக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீ தலதா புனித யாத்திரைக்காக கண்டிக்கு வந்து வரிசையில் நிற்கும் யாத்திரிகர்களுக்கென ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

நேற்றிரவு முதல் இந்த செயற்த்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வரிசையில் நிற்கும் யாத்திரிகர்களை அடையாளம் காணும் வகையில் இதனை முன்னெடுக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

trai

Share This