கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,

கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும்.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாக உள்ளே நுழைந்து, குறுக்கு வீதியைக் கடந்து யட்டிநுவர வீதிக்குச் சென்று, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் தேவாலயத்திற்கு அருகில் இடதுபுறம் திரும்பி, திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்லலாம்.

கட்டுகஸ்தொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹய்யாவ நோக்கிச் செல்லலாம்.

தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்திக்குச் சென்று எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போகம்பரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களும் இடதுபுறமாகவும், கண்டி நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.

அதேபோல ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி வழியாகவும் கண்டி நகரத்திற்குள் நுழையலாம்.

நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்களானது கடிகார கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாகச் சென்று, குயின் ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜோய் படகு சேவையைக் கடந்து, சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்லலாம். மேலும், போகம்பர சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வழியாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர நோக்கிச் செல்லலாம்.

பள்ளிவாசல் வீதி இரு பக்கங்களுக்கும் பயணிக்கும் வகையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் கண்டியிருந்து கொழும்பு நோக்கி வெளியேறும் வாகனங்கள் பழைய பேராதனை வீதி மற்றும் வில்லியம் கோபல்லவ மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.

கண்டி எசல பெரஹெர கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை வீதி ஊர்வலம் இடம்பெறும்.

இதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் மக்களைச் சரிபார்த்தல், சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share This