வெள்ளிக்கிழமை கூடும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம்
![வெள்ளிக்கிழமை கூடும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம்](https://oruvan.com/wp-content/uploads/2024/12/Sri-Lankan-Parliament-Complex.jpg)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, வெள்ளிக்கிழமை (14) காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16இன் விதிகளின்படி, பிரதமர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த அழைப்பாணை விடுக்கப்படுகிறது.
இந்த சட்டமூலத்தை பரிசீலிக்க பெப்ரவரி 14ஆம் திகதி தொடர்புடைய அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.