தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

நீதிமன்ற உத்தரவின் பேரில், தற்போது சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது பல்லேகலே, தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபர் உட்பட 8 பேருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share This