சிறப்பு தேடுதல் நடவடிக்கை – மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேரை மீட்ட கடற்படை

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை மீட்டுள்ளனர்.
கடல் வழிகள் வழியாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தலைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான தேடல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னாவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தலைமன்னாரின் மணல் திட்டுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, அங்கு, தலைமன்னாரில் உள்ள ஏழாவது (07) மணல் திட்டில் நீரிழப்பு காரணமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஆறு (06) பேர் இனங்காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வருவதாக உறுதியளித்த ஆட்கடத்தல்காரர்களால், தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கைக்கு சொந்தமான ஏழாம் (07) மணல்திட்டில் கைவிடப்பட்டு சென்ற இவ் நபர்களை கடற்படையின் மீட்டன்.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்ற்றப்பட்ட நபர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்ட வவுனியா, மடு மற்றும் கொக்கடிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.