தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் (27) விடுமுறை வழங்கவும் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நாளை மறுதினம் வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This