
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், முஸ்லிம்கள் 106 பேர், தமிழர்கள் 95 பேர், சிங்களவர்கள் 4 பேர் உட்பட 221 பேர் பயங்கரவாத்துடன் தொடர்புடையவர்கள் என அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் நபர்கள் மற்றும் அமைப்புகள் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2026 ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2014, மார்ச் 21இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட சில பெயர்கள் நீக்கப்பட்டு 2025, டிசம்பர்,19 புதிய பெயர்கள் உள்ளடக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இதில் தமிழ் புனர்வாழ்வு கழகம், தமிழர் ஒருங்கிணைப்பு குழு (டி.சி.சி.), உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அமைப்பு, உலகத் தமிழர் நிவாரண நிதியம், எச்.கியூ தமைக்குழு உட்பட 95 தனிநபர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இதேவேளை கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (யு.ரி.ஜே.), சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.ரிஜே), ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.ரி.ஜே), அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி..ரி.ஜே), ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ- அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மற்றும் தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குர்ஆன் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்த பாவியா, ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஜ.எஸ்.எம்) மறுபெயர் ஜம்இய்யா, ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ஜ.எஸ்.ஜ.எஸ்) மறுபெயர் அல்-தௌலா அல்- இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா, அல்கொய்தா அமைப்பு, சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம், சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின் உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது, அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது,
சீருடையை, உடைமையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ, கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது இதில் இணைவதோ ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.
மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில் வைத் திருத்தலோ அல்லது விநியோகித்தலோ நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாகாது, அல்லது அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது, என வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
