தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி – திகதி அறிவிப்பு

தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஶ்ரீ தலதா பார்வை என்ற பெயரில் தலதா மாளிகை வளாகத்துக்குள் 10 நாட்களுக்கு இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
தொடக்க நாளன்று தலதா கண்காட்சி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.00 மணிக்கு நிறைவு பெறும்.
அதன் பின்னர், ஏனைய நாட்களில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.