ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க விசேட நீதிமன்றம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு விசேட நீதிமன்றத்தை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பல விசேட மேல் நீதிமன்றங்களை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்தும் இதனை செய்ய உள்ளோம். முழு வீச்சில் நடைபெறும் இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத் தரவே” என்றார்.