
பேரிடர் குறித்து பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு
நாட்டில் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு
இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின் மூலங்களை அணுகுவதற்கு முன்னர் உத்தியோகப்பூர்வ மின் தொழில்நுட்ப வல்லுநரின் பரிசோதனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் எந்த உபகரணங்களையும் இயக்குவதைத் தவிர்க்குமாறும்
பொதுமக்களிடம் இலங்கை பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
CATEGORIES இலங்கை
