ஆசியரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களை பூர்த்தி செய்யும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.