ஸ்பெயின் சூப்பர் கிண்ணம் – இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை பந்தாடியது பார்சிலோனா
ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட் அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் எம்பாப்பே கோல் அடித்து அசத்தியிருந்தார்.
எனினும், 22வது நிமிடத்தில் பார்சிலோனாவின் லேமின் யமல் மற்றும் 39வது நிமிடத்தில் ரொபின்ஹா கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.
மேலும், 36வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரொபர்ட் லெவாண்டோஸ்கி அதனை கோலாக மாற்றியிருந்தார். இதனால் பார்சிலோனா 3-1 என முன்னிலைபெற்றது.
முதல்பாதி நேர ஆட்டம் 45-வது நிமிடத்தில் முடிவடைந்தது. எனினும், முதல்பாதி நேர ஆட்டத்தின்போது காயத்தால் ஆட்டம் நிறுத்தம் போன்றவற்றால் கூடுதல் நேரம் (Injury Time) வழங்கப்பட்டது.
இதன் 10வது நிமிடத்தில் (45+10) பார்சிலோனா அணியின் அலேஜாண்ட்ரோ கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்ட முடிவில் பார்சிலோனா 4-2 என முன்னிலைப் பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 48வது நிமிடத்தில் ரொபின்ஹா மீண்டும் கோல் அடிக்க பார்சிலோனா அணி 5-1 என முன்னிலைப் பெற்றது.
எவ்வாறாயினும், போட்டியில் 56வது நிமிடத்தில் பார்சிலோனா வோஜ்சியெச் ஸ்செஸ்னி ரெட்கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி ரியல் மாட்ரிட் வீரர் ரொட்ரிகோ 60வது நிமிடத்தில் கோல் அடித்திருந்தார். இதானல் 5-2 என பார்சிலோனா 5-2 முன்னிலைப் பெற்றிருந்தது.
அதன்பின் ரியல் மாட்ரிட் வீரர்களை கோல் அடிக்கவிடாதபடி பார்சிலோனா வீரர்கள் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆட்டம் முடியும் வரை ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்று ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை கைப்பற்றியது.