சூரியனை நெருங்கிய விண்கலம்…நாசா வெளியிட்ட பதிவு
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டும் பார்க்கர் சோலார் புரோப் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் 1377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும்.
மணிக்கு 6 இலட்சத்து 92 ஆயிரத்து 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.
இதுதான் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகவும் வேகமான பொருள்.
இந்நிலையில் சூரியனுக்கு மிக அருகில் அதாவது, சூரியனின் மேற்பரப்பிலிருந்து 6.1 மில்லியன் கிலோமீட்டர் தூரம் வரை இவ் விண்கலம் சென்றுள்ளது.