மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிப்பு – தென் மாகாண ஆளுநர் கடும் எச்சரிக்கை

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிப்பு – தென் மாகாண ஆளுநர் கடும் எச்சரிக்கை

தென் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை துன்புறுத்தி பணம் வசூலிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

சில அதிபர்கள் இவ்வாறு பணத்தை வசூலிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக வசூலிக்கப்படும் பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று சில பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

அதன்படி, தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளில் இதுபோன்ற பணம் வசூலிக்கப்படும் பல நிகழ்வுகளை நிறுத்துமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பாடசாலைகளை தொடர்ந்து கண்காணிப்பதாக தென் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This