தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பு விகிதம் அதிகரிப்பு
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024 இல் அதிகரித்தது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட தென் கொரியாவில், ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டை விட, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3 வீதம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, 2023 ஆம் ஆண்டில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 7.7 வீதம் குறைந்து. இது உலகளவில் மிகக் குறைந்த பிறப்பு வீதம் என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
2023 ஆம் ஆண்டில் திருமணங்கள் அதிகரித்ததால் தற்போது பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய்களின் போது தங்கள் திருமணங்களை ஒத்திவைத்த தம்பதிகள் மீண்டும் 2023இல் திருமணங்களை செய்துக்கொண்டனர். கடந்த 12 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் 2023ஆம் ஆண்டிலேயே பதிவானது.
திருமணத்திற்கும் பிறப்புகளுக்கும் இடையே அதிக தொடர்பு உள்ளது. மேலும் தென் கொரியர்கள் பெரும்பாலும் குழந்தைகளைப் பெறுவதற்கு திருமணத்தை ஒரு முன்நிபந்தனையாகக் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு கணக்கெடுப்பில், தென் கொரியர்களில் 62.8% பேர் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவதை எதிர்ப்பதாக கண்டறியப்பட்டது.