சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது

சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது.

வியாழக்கிழமை பர்தமானுக்குச் சென்று கொண்டிருந்தபோது துர்காபூர் விரைவுச் சாலையில் தண்டன்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி பயணித்த காருக்கு முன்னால் பயணித்த லொறி எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குலி பயணித்த ரேஞ்ச் ரோவர் காரின் சாரதி, லொறியின் பின்புறத்தில் மோதாமல் இருக்க பிரேக்கை அழுத்தினார், இதனால் மற்ற வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி. வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வாகனத் தொடரணியில் இருந்த இரண்டு கார்கள் லேசான சேதத்தை சந்தித்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் பத்து நிமிடங்கள் பயணம் தடைபட்டதாகவும், பின்னர் மீண்டும் தொடங்கியதாகவும் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியாழக்கிழமை பர்தமான் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும், பர்தமான் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்விலும் கங்குலி கலந்து கொண்டார்.

சவுரவ் கங்குலி இந்தியாவுக்காக 113 டெஸ்ட் போட்டிகளிலும் 311 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய ஒரு வீரர். அவர் டெஸ்ட் போட்டிகளில் 7000 ஓட்டங்களுக்கு மேலும், ஒருநாள் போட்டிகளில் 11000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்துள்ளார்.

Share This