களனிவெளி ரயில் பாதையில் சில ரயில் சேவைகள் ரத்து

களனிவெளி ரயில் பாதையில் இன்றும் நாளையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இடைநிறுத்தப்படும் ரயில் சேவைகள் வருமாறு,
ரயில் எண் 9254 | காலை 08:30 கொழும்பு கோட்டை – அவிசாவளை (மெதுவானது)
ரயில் எண் 9260 | மதியம் 01:55 கொழும்பு கோட்டை – பாதுக்க (மெதுவானது)
ரயில் எண் 9261 | மாலை 04:00 கொழும்பு கோட்டை – அவிசாவளை (அரைக் கடுகதி)
ரயில் எண் 9657 | மதியம் 12:25 அவிசாவளை- கொழும்பு கோட்டை (மெதுவானது)
ரயில் எண் 9661 | மாலை 03:45 பாதுக்க – கொழும்பு கோட்டை (அரைக் கடுகதி)
எவ்வாறாயினும், இரவு நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.