
TGI Friday இன் சில கிளைகள் இங்கிலாந்தில் மூடப்படுகிறது
இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான உணவகச் சங்கிலிகளில் ஒன்றின் TGI Fridays இன் புதிய உரிமையாளரான Sugarloaf TGIF அதன் பல்வேறு கிளைகளை விரைவில் மூடும் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டால் 2000ம் வரையான ஊழியர்கள் தமது பணியை இழக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு TGI Friday உணவகச் சங்கிலியை Sugarloaf TGIF அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
இதன் பின்னர் அதிக கிளைகளை கொண்டு இயங்குவதால் நிறுவனத்தை இலாப நிலைக்கு கொண்டுவர முடியாதென்பதால் இவ்வாறு பல்வேறு கிளைகளை மூடும் தீர்மானத்தை Sugarloaf TGIF எடுத்தள்ளது.
இங்கிலாந்தில் மொத்தம் 49 கிளைகளை கொண்ட TGI Fridays இயங்குகிறது. இதில் 15 முதல் 20 கிளைகளை மூடும் தீர்மானத்தை Sugarloaf TGIF எடுத்துள்ளது.
TAGS TGI Friday
