
இங்கிலாந்தில் பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்து கைதான சிலர் உயிரிழக்கும் அபாயம்
பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டு இங்கிலாந்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தொடர்ந்து தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
69 நாட்களுக்கும் அதிகமாக அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவரும் மருத்துவர், இந்த கைதிகளின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து சட்டத்தின்படி ஒருவரை ஆறுமாதங்கள் வரையே தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்றும் இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காவலில் இருப்பதாகவும் அவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
என்றாலும், கைதிகள் மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்புக் காவல் முடிவுகள் சுயாதீன நீதிபதிகளே எடுக்கின்றனர் என சிறைச்சாலை அமைச்சர் லார்ட் டிம்ப்சன், கூறியுள்ளார்.
