
ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட படையினர் அனுமதி
அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய இன்றையதினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரி உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் ஆலயத்திற்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
CATEGORIES இலங்கை
