மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத குளிர்பான போத்தல்கள்
மனித பாவனைக்கு உதவாத செயற்கை பொருட்கள் அடங்கிய பாரியளவிலான குளிர்பான போத்தல்களை மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ், பொது சுகாதார அதிகாரிகள் அவசர சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோத குளிர்பானங்களை கண்டுபிடித்துள்ளனர்.
குளிர்பானங்களில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஆசிட் மற்றும் தெகாத வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குளிர்பானத்தின் உற்பத்தியாளர், விநியோகஸ்தர் மற்றும் விற்பனையாளர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
60,000 ரூபாய் மொத்த அபராதமாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்த குளிர்பானங்களை அழித்து ஏனைய விற்பனை நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.