கோடைக் கால பானம் மோரில் இத்தனை சத்துக்களா?

பொதுவாக மோர் என்பது புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பான வகை. இதில் விட்டமின், அமினோ அசிட், மினரல் ஆகிய சத்துக்கள் உள்ளன.
இந்நிலையில் தினமும் மோர் குடிப்பதால் என்னென்ன பலன்கள் எனப் பார்ப்போம்.
மோர் குடிப்பதன் மூலம் குடலிலுள்ள நல்ல பக்டீரியாக்கள் அதிகரிக்கும். மோரிலுள்ள புளிப்பு சர்க்கரையாக மாறி சமிபாட்டுக்கு உதவும். வயிற்றிலுள்ள அமிலத்தை குறைத்து நெஞ்செரிச்சலில் இருந்து பாதுகாக்கும்.
மோரிலுள்ள கல்சியம், புரதம், விட்டமின் போன்றவை எலும்பின் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது. மேலும் கோடை காலங்களில் மோர் குடிப்பதால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும்.
மோரிலுள்ள லக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மோர் குடிப்பதன் மூலம் பசியுணர்வு கட்டுக்குள் இருக்கும். உடை எடையைக் குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.