‘காதல்’, ‘கவிதை’ என பாடலாசிரியர் சிநேகனின் குழந்தைகளுக்கு பெயர் வைத்த உலக நாயகன்

பாடலாசிரியர் சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத் தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை சினேகன் – கன்னிகா தம்பதி சந்தித்துள்ளனர்.
அப்போது இரு குழந்தைகளுக்கும் கமல்ஹாசன் தங்க வளையல்கள் அணிவித்ததோடு குழந்தைகளுக்கு காதல், கவிதை என பெயரும் சூட்டியுள்ளார்.
இது தொடர்பில் பாடலாசிரியர் சினேகன் அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.