இருபது சிகரெட்டுகள் புகைப்பதால் வாழ்நாளில் 7 மணித்தியாலம் பறிபோகிறது..ஆய்வில் தகவல்

இருபது சிகரெட்டுகள் புகைப்பதால் வாழ்நாளில் 7 மணித்தியாலம் பறிபோகிறது..ஆய்வில் தகவல்

ஒரு மனிதன் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டினால் அவனது வாழ்நாளில் சராசரியாக இருபது நிமிடங்களை இழப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் மேற்பார்வையின் கீழ், லண்டன் யுனிவர்சிட்டி கொலேஜ் நடத்திய ஆய்வொன்றிலேயே இவ் விடயம் தெரிய வந்துள்ளது.

ஒரு பெட்டியில் உள்ள இருபது சிகரெட்டுகளை புகைக்கும் மனிதன் அவனது வாழ்நாளில் சுமார் ஏழு மணித்தியாலத்தை பறி கொடுப்பதாகவும் ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் பெண்கள் 22 நிமிடங்களையும் இழப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவ் அறிக்கையை சுட்டிக்காட்டி 2025 இல் தங்கள் நாட்டு மக்களை சிகரெட்டை நிறுத்துமாறு இங்கிலாந்து சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

அதிகமாக சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கானவர்கள் இறக்கின்றனர்.

இது இங்கிலாந்தில் சுமார் 80,000 உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகவும் புற்றுநோய் இறப்புகளில் கால்வாசி இறப்புகள் சிகரெட் பழக்கத்தால் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This