சிறிய அளவிலான நெல் தொகையே வழங்கப்பட்டுள்ளது

விவசாயிகள் தற்போது அரசாங்கத்திற்கு சிறிய அளவில் நெல்லை வழங்கி வருவதாகவும் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
சந்தையில் இன்னுமும் குறைந்த அளவிலேயே நெல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் அதிகளவு நெல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அதற்குள் சபைக்கு நெல் கையிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெல் கொள்முதல் செய்வதற்காக அரசாங்கம் இதுவரை ஐந்து பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது என்றும், நெல் கொள்முதல் செய்வதற்கு உரிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள் இன்னும் சிறிய அளவிலான நெல்லையே, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கியுள்ளதால் இன்னும் 100 மெட்ரிக் தொன் நெல்லைக் கூட வாங்கவில்லை என்று அவர் கூறினார்.