பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்….எஸ்கே43 படக்குழுவின் சர்ப்ரைஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவரது 23 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத் திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப் படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார். எக்சன் கதைக்களத்தில் இப் படம் உருவாகிறது.
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் அவரது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை சிறப்பிக்கும் விதமாக எஸ்கே23 படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இப் படத்துக்கு மதராஸி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.