சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்

சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்துள்ளது.

படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் ரவி மோகன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், படம் அழகாக உருவாகி வருவதாகவும் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அவர்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை, பராசக்தி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்ததாக சுதா கொங்கரா சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

பராசக்தி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 1960களின் மெட்ராஸை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர்.

மெட்ராஸில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் கதை விரிவடைவதை டீஸர் காட்டுகிறது. சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தைக் கொல்லத் தீர்மானித்த ரவி மோகனின் கதாபாத்திரத்தையும் டீஸர் அறிமுகப்படுத்துகிறது.

#SK25 (சிவகார்த்திகேயனின் 25வது படம்) என்று முன்னர் குறிப்பிடப்பட்ட பராசக்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This