பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் கொண்டாட்டம்….

சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பராசக்தி.
1965 ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி திணிப்பைக் குறித்து இப் படம் பேசவுள்ளது.
இப் படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதோடு, ஜி.வி.பிரகாஷ் இசைமையக்கிறார்.
அண்மையில் படத்தின் டை்டில் டீசர் வெளியாகியிருந்தது. அதில் சில சர்ச்சைகளும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 17 ஆம் திகதி நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்நிலையில் பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.