இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25வது படமா பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை வந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படமான பராசக்தியின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்துள்ளது.
படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் ரவி மோகன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று அண்மையில் ஊடகங்களிடம் தெரிவிதிருந்தார்.
பராசக்தி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 1960களின் மெட்ராஸை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர்.
மெட்ராஸில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் கதை விரிவடைவதை டீஸர் காட்டுகிறது. சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தைக் கொல்லத் தீர்மானித்த ரவி மோகனின் கதாபாத்திரத்தையும் டீஸர் அறிமுகப்படுத்துகிறது.
#SK25 (சிவகார்த்திகேயனின் 25வது படம்) என்று முன்னர் குறிப்பிடப்பட்ட பராசக்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.