குளிக்கும்போது பாட்டு பாடினால் மன அழுத்தம் குறையும்
வாழ்க்கையில் ஒரு சில விடயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் அல்லவா. அப்படி நமக்கே தெரியாத சில விடயங்கள் குறித்து பார்ப்போம்.
- ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் கண்கள் எந்த அளவில் இருந்ததோ அதேயளவுத்தான் இறுதி வரையிலும் இருக்கும். ஆனால், காது, மூக்கு மட்டும் குறிப்பிட்ட வயது வரை வளரும்.
- மூளையில் ஆண்களின் மூளை பெண்களின் மூளை என்று தனித்தனியாக எதுவும் கிடையாது.
- குளிக்கும்போது பாட்டு பாடுதல் மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைத்து மன நிலையை மேம்படுத்தும்.
- நேர்மறை எண்ணங்களுடன் ஒரு விடயம் நடக்கும் என நம்பினால், அது நிச்சயமாக நடக்கும்.
- மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் நிற்காது. அவ்வாறு நிற்கும் பட்சத்தில் அவர்கள் மீது அன்பு இல்லை என்று அர்த்தம்.
- சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பானாம்.
- ஒருவர் சிங்கிளாக இருக்கும்போது திருமணமானவர்களையும் காதலில் விழுந்த பின் சிங்கிளையும கவனிப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
- இனிப்புகள், சொக்லேட்டுகள் ஆகியவற்றை விரும்பி உண்பவர்கள் வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.
- உங்களிடம் உண்மையாக ஒருவர் அன்பு கொண்டிருந்தால், உங்கள் கண்களைப் பார்த்தே உங்கள் மன நிலையைக் கூறிவிடுவார்கள்.