
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் – பிரதமர் ஹரிணி சுவிஸில் சந்திப்பு
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார்.
” இச்சந்திப்பின்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காக நன்றியைத் தெரிவித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினேன்.” – என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
