
வெள்ளியை அடகு வைக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியர்கள் வெள்ளியை அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முடியும்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சிறய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
