
நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!
நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (31) காலை சிறைச்சாலை கைதி ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையின் 14வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளும் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த கைதி களுத்துறை சிறைச்சாலையின் கைதி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை 6.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வைத்தியசாலை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்தார்.
அதன்படி, கைதி அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.
