
அவுஸ்திரேலியாவில் யூதர்களின் நிகழ்வை இலக்கு வைத்து துப்பாக்கி பியோகம் – 10 பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “அதிர்ச்சியூட்டும் மற்றும் துயரமளிக்கும் சம்பவம் என கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
