தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.