களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுபோவில பன்சல வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள்  வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிதி தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கொஹுவல பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This