கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் படுகாயம்

கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் படுகாயம்

கந்தானை பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இந்தச சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் சமீர மனஹார என்று  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த இருவரும் தற்போது ராகம  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share This