புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – கணேமுல்ல சஞ்சீவ பலி

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதாள உலகப் பிரபலம் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
சட்டத்தரணி உடையில் மாறுவேடமிட்டு வந்த துப்பாக்கிதாரி ஒருவர் சஞ்சீவவை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.