கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு

கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு

க​ன​டா​வின் பிரிட்​டஷ் கொல்​பியா மாகாணம் சர்ரே நகரில் Kap’s Cafe என்ற உணவகம் உள்​ளது. இது பஞ்​சாபை சேர்ந்த நகைச்​சுவை நடிகர் கபில் சர்​மாவுக்கு சொந்​த​மானது என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த உணவகத்​தில் வியாழக்கிழமை அதி​காலை 1.50 மணி​யள​வில் மர்ம நபர் ஒரு​வர் 8 முறை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு பிறகு அங்​கிருந்து காரில் தப்பிச் சென்​றார். அதிர்​ஷ்வச​மாக இதில் எவரும் காயம் அடைய​வில்​லை. மேலும் உணவக கட்​டிடத்​தி​லும் அதிக சேதம் ஏற்​பட​வில்லை.

இந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பாக தகவல் அறிந்த போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து விசா​ரணையை தொடங்​கினர். தடய​வியல் நிபுணர்​கள் தடயங்​களை சேகரித்​துள்​ளனர். இந்​நிலை​யில் இந்த தாக்​குதலுக்கு காலிஸ்​தான் தீவிர​வாத அமைப்​பான பப்​பர் கல்சா இன்​டர்​நேஷனல் (பிகேஐ) உறுப்​பினர் ஹர்​ஜித் சிங் லட்டி பொறுப்​பேற்​றுள்​ளார்.

ஜெர்​மனியை சேர்ந்த இவர் என்​ஐஏ-​வின் மிக​வும் தேடப்​படு​வோர் பட்​டியலில் இருக்​கிறார். கபில் சர்மா தொகுத்து வழங்​கிய ஒரு தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் நிஹாங் சீக்​கியர்​கள் குறித்த கருத்​துகளுக்கு லட்டி ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து லட்டி வெளி​யிட்​டுள்ள வீடியோ பதி​வில், “கபில் சர்​மா​வின் நகைச்​சுவை நிகழ்ச்​சி​யின் ஒரு எபிசோடில் நிஹாங் சீக்​கியர்​களின் உடை அல்​லது நடத்தை குறித்து ஒரு கதா​பாத்​திரம் கேலி செய்​துள்​ளது. இதற்கு கபில் சர்மா பகிரங்​க​மாக மன்​னிப்பு கேட்க வேண்​டும்’’ என்று அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

பஞ்​சாபில் கடந்த ஆண்டு விஎச்பி அமைப்​பின் விகாஸ் பிர​பாகர் கொலை உட்பட திட்​ட​மிட்ட கொலைகள் மற்​றும் கொலை முயற்​சிகளுக்கு பின்​னால் லட்டி இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக லட்டி உள்​ளிட்ட பிகேஐ அமைப்​பினர் மீது என்ஐஏ குற்​றப் பத்​திரிகை தாக்​கல்​ செய்​துள்​ளது.

 

Share This