ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – தமிழ் இளைஞர் பலி

ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – தமிழ் இளைஞர் பலி

ஜமைக்கா நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் பதிவான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

ஜமைக்கா நாட்டில், பிராவிடன்ஸ் தீவில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய விக்னேஷ் என்ற இளைஞரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடியில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையத்துச் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது பெற்றோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனு அளித்துள்ளனர்.

Share This