நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக காலவகாசம் கோரிய ஷிரந்தி

நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக காலவகாசம் கோரிய ஷிரந்தி

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக,
இன்றைய தினம் காலை 09 மணிக்கு பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் ‘சிரிலிய’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )